பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில் நாளை பொங்கல் விழா

பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில் திருவள்ளுவர் நாள்விழா, பொங்கல் விழா ஆகியன புதன்கிழமை (ஜனவரி 16) கொண்டாடப்படுகிறது.

பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில் திருவள்ளுவர் நாள்விழா, பொங்கல் விழா ஆகியன புதன்கிழமை (ஜனவரி 16) கொண்டாடப்படுகிறது.
 அல்சூரில் உள்ள தமிழ்ச்சங்க வளாகத்தில், அன்று காலை 8.30 மணிக்கு நடைபெறும் விழாவுக்கு, சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் தலைமை வகிக்கிறார்.  விழாவை அல்சூர் மாநகர்மன்ற வார்டு உறுப்பினர் மமதா சரவணன் தொடக்கி வைக்கிறார். 
இதன்பின்னர்,  மகளிர் பொங்கல் வைத்தல்,  'தமிழுக்கும் அமுதென்றுபேர்' என்ற பாரதிதாசனின் பாடலுடன் கலைநிகழ்ச்சி,,  சென்னை மாற்று ஊடக மையத்தின் நாட்டுப்புறக்கலைஞர்களின் பறையாட்டம், சக்கையாட்டம், களியாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், தீப்பந்தஆட்டம், வாள்வீச்சு ஆட்டம், கலைநிகழ்ச்சிகள் ஆகியன இடம்பெறுகின்றன.
பெங்களூரைச் சேர்ந்த தமிழ்ப் பள்ளிகளான காமராசர் உயர்நிலைப் பள்ளி, அல்போன்சியார் உயர்நிலைப் பள்ளி, சங்கீதா நடனப் பள்ளி மாணவர்களால் பரதநாட்டியம், கோலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், கிராமிய நடனம், பொங்கல்விழா நடனம் உள்பட பல்வேறு நாட்டுப்புற நடனங்களும் நடைபெறவுள்ளன. 
விழாவில் தமிழ்ச் சங்க ஆண்டு விழா போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு விருதும்,  பரிசும்,  பட்டயமும் வழங்கப்படுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com