12 மாநகராட்சி நிலைக்குழுக்களுக்கு தலைவர்கள் தேர்வு

பெங்களூரு மாநகராட்சியின் 12 நிலைக்குழுக்களின் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் அனைவரும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பெங்களூரு மாநகராட்சியின் 12 நிலைக்குழுக்களின் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் அனைவரும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பெங்களூரு மாநகராட்சி மாமன்றத்தில் வியாழக்கிழமை மேயர் கங்காம்பிகே தலைமையில் 12 நிலைக்குழுக்களின் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. 12 நிலைக்குழுக்களுக்கும் தலா ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்ததால், அக்குழுக்களின் தலைவர்களாக 12 பேரும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக மேயர் கங்காம்பிகே அறிவித்தார். 
6 காங்கிரஸ், 4 மஜத, 2 சுயேச்சை மாமன்ற உறுப்பினர்களுக்கு தலைவர் பதவி கிடைத்தன. அப்போது துணை மேயர் பத்ரேகெளடா, ஆளுங்கட்சித் தலைவர் சிவராஜ், மஜதக்குழு தலைவர் நேத்ராவதி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
இந்தத் தேர்தலில் கலந்து கொள்ளாமல் பாஜகவினர் புறக்கணித்தனர். ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 நிலைக்குழுக்கள் தலைவர்கள் வருமாறு: 
வரி மற்றும் பொருளாதாரம்-ஹேமலதா கோபாலையா(மஜத), பொதுசுகாதாரம்-முஜ்ஜாஹித் பாஷா(சுயேச்சை), நகர திட்டம் மற்றும் வளர்ச்சிப் பணி-எஸ்.ஜி.நாகராஜ்(காங்கிரஸ்), வார்டு அளவிலான பொதுப்பணிகள்-உமேசல்மா(மஜத), பொதுக்கணக்கு-வேலுநாயக்கர்(காங்கிரஸ்), கல்வி-இம்ரான்பாஷா(மஜத), மேல்முறையீடு-சுஜாதா ரமேஷ்(காங்கிரஸ்), தோட்டக்கலை-ஐஸ்வர்யா(மஜத), சந்தை-ஃபரீதா இஸ்தியாக்(காங்கிரஸ்).
ஊழியர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தம்-ஆனந்த்குமார்(சுயேச்சை), பெரிய பொதுப்பணிகள்-லாவண்யா கணேஷ்(காங்கிரஸ்), சமூகநலம்-செளம்யா சிவக்குமார்(காங்கிரஸ்). வெற்றிபெற்ற நிலைக்குழுக்களின் தலைவர்களுக்கு மேயர் கங்காம்பிகே, துணைமேயர் பத்ரேகெளடா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் ஓராண்டுக்கு இப்பதவியில் நீடிப்பார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com