எதிர்கால மின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்: குமாரசாமி

எதிர்காலத்தில் மின் துறை சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு தற்போதே தீர்வு கண்டறிவது அவசியம் என்று பொறியாளர்களை முதல்வர் குமாரசாமி கேட்டுக்  கொண்டார்.

எதிர்காலத்தில் மின் துறை சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு தற்போதே தீர்வு கண்டறிவது அவசியம் என்று பொறியாளர்களை முதல்வர் குமாரசாமி கேட்டுக்  கொண்டார்.
பெங்களூரில் வியாழக்கிழமை கர்நாடக மின் வாரிய பொறியாளர் சங்கத்தின் தொழில்நுட்ப நாள்குறிப்பு, தினசரி வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது: 
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மின் துறையில் இருந்த பிரச்னைகள் தற்போதுள்ள பிரச்னைகளுடன் மாறுபட்டவை. இன்னும் 10 ஆண்டுகளில் மின் துறையில் நாம் சந்திக்கப் போகும் சவால்கள், பிரச்னைகள் ஏராளமாக இருக்கும் என்பவது உண்மை. 
எனவே, எதிர்காலத்தில் மின் துறையில் சந்திக்கப்போகும் பிரச்னைகளுக்கு தீர்வை கண்டறிவது அவசியம். இதேபோல அதிக அளவிலான மின் உற்பத்திக்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய அளவில் முக்கிய மாநிலமாக விளங்கும் கர்நாடகத்தில் மின் உற்பத்தி, பகிர்வில் தொலைநோக்குத் திட்டங்களை வகுத்து, அதைச் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. 
தற்போதைய இளைஞர்களிடத்தில் அபாரமான திறமை உள்ளது. அதனை ஆக்கபூர்வமாக மின் துறை வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சர்வதேச அளவில் கர்நாடகப் பொறியாளர்கள் முன்மாதிரியாக விளங்குகின்றனர். அவர்களின் திறமையையும், தொழில்நுட்ப அறிவையும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளோம். 
பக்கத்து மாநிலங்களை ஒப்பிடுகையில் மின் உற்பத்தியிலும், விநியோகத்திலும் கர்நாடகம் சிறந்து விளங்குகிறது. நிலக்கரி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகளால் மின் உற்பத்தி பாதிக்கப்படுகின்றது. எனவே, மின் உற்பத்தி பாதிக்கப்படாத வகையில் நிரந்தரத் திட்டங்களைச் செயல்படுத்த பொறியாளர்கள் ஆலோசனைகளை வழங்க வேண்டும். 
மின் துறை பொறியாளர்கள்  ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்கக் கோரிக்கை முன்வைத்துள்ளனர். துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
நிகழ்ச்சியில் மின்துறை கூடுதல் செயலாளர் ரவிக்குமார், கர்நாடக மின் பகிர்மான கழகத்தின் மேலாண் இயக்குநர் செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com