"தமிழர்களின் பாதுகாப்புக்கு பாடுபட்டவர் சண்முகசுந்தரம்'

தமிழர்களின் பாதுகாப்புக்கு அயராது பாடுபட்டவர் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் ச

தமிழர்களின் பாதுகாப்புக்கு அயராது பாடுபட்டவர் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம் என முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க் புகழாரம் சூட்டினார்.
கன்னடர்-தமிழர் நல்லிணக்கம் மற்றும் சமூக நற்பணி அறக்கட்டளையின் சார்பில், பெங்களூரு, அல்சூரில் உள்ள பெங்களூரு தமிழ்ச் சங்க வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு தமிழ்ச் சங்க முன்னாள் தலைவரும், லாரி போக்குவரத்து சங்கத்தின் நிறுவனச் செயலருமான சண்முகசுந்தரத்தின் 10-ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
அறக்கட்டளைத் தலைவர் ராமந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் பி.ஜி.ஆர்.சிந்தியா, ரோஷன் பெய்க், பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன், துணைத் தலைவர் கோ.தாமோதரன், செயலர் இராமசுப்பிரமணியன், அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர் மு.மீனாட்சிசுந்தரம், லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் பாரி, தொழிலதிபர் பாலசுந்தரம், கர்நாடக மாநில திராவிடர் கழகத் தலைவர் மு.சானகிராமன், திராவிடர்கழக பொதுச் செயலர் துரைசந்திரசேகரன், சண்முகசுந்தரத்தின் மூத்த சகோதரர் வஜ்ஜிரவேல், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு சண்முகசுந்தரத்தின் உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 
இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு எழுத்தேடுகள், வடிவியல் பெட்டி, காலணிகள் வழங்கப்பட்டன. பென்களுக்கு சேலை, போர்வை, சால்வைகள் அளிக்கப்பட்டன. தமிழ்ச் சங்க துணைச் செயலர் அனைவரையும் வரவேற்க, உலகத் தமிழ்க் கழகத் தலைவர் தென்னவன், குறள்வணக்கத்துடன் நிகழ்ச்சியை தொடக்கினார். அறக்கட்டளைத் தலைவர் ராமசந்திரன் நன்றி கூறினார்.
முன்னதாக, நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க் பேசியது: தமிழ்ச் சங்கத்தின் தலைவராக பங்காற்றிய சண்முகசுந்தரம், கர்நாடகத் தமிழர்களுக்கு வாய்த்த விலைமதிக்க முடியாத அருள்கொடையாகும். வள்ளலாரின் அருள்பெரும் பக்தராக விளங்கிய அவர், கன்னடர்-தமிழர்களிடையே நல்லுறவை மேம்படுத்துவதில் மட்டுமல்லாது, மதங்களுக்கு இடையே உறவுப்பாலமாக விளங்கியவர்.
கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் அசாதாரண சூழ்நிலையை எதிர்கொண்ட போது, அங்கு ஓடோடிச் சென்று தமிழர்களை அரவணைத்தவர். ஒருவகையில் கர்நாடகத் தமிழர்களின் பாதுகாப்பு அரணாக விளங்கியவர். சந்தனக் கடத்தல் வீரப்பன் நடிகர் ராஜ்குமாரை கடத்திச் சென்று காட்டில் வைத்திருந்தபோது, அவரை மீட்பதில் சண்முகசுந்தரம் முக்கியப் பங்காற்றியதை
வரலாறு மறக்காது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com