டிடிவி தினகரன் பங்கேற்கும் உண்ணாவிரதத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை மகாகவி பாரதி நகரில் டிடிவி தினகரன் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.


சென்னை மகாகவி பாரதி நகரில் டிடிவி தினகரன் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், அமமுக வடசென்னை மாவட்டச் செயலாளர் வெற்றிவேல் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதைக் கண்டித்து, எங்களது கட்சி சார்பில் வரும் 17-இல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டோம். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொள்கிறார்.
இதற்கு அனுமதி கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தோம். காவல் துறையினர் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர். எனவே, போராட்டத்துக்கு அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். 
இந்த வழக்கு நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் போராட்டத்துக்கு அனுமதி கோரிய இடத்தில் 300 பேருக்கு மேல் கலந்து கொள்வதை அனுமதிக்க முடியாது என வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 300 பேருக்கு மேல் போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம், சட்டம் ஒழுங்குக்கு எந்தவிதமான குந்தகமும் ஏற்படுத்த மாட்டோம் என உத்தரவாதம் அளித்து புதிதாக மனு தாக்கல் செய்யும் நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com