வேலைவாய்ப்பைப் பெறும் திறன்மிக்கவர்களாக மாணவர்களை மேம்படுத்த நடவடிக்கை

மாணவர்களுக்கு தகுந்த கல்வித் தகுதியை உருவாக்கி, வேலைவாய்ப்பைப் பெறும் திறன்மிக்கவர்களாக மேம்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்று கிரசென்ட்
வேலைவாய்ப்பைப் பெறும் திறன்மிக்கவர்களாக மாணவர்களை மேம்படுத்த நடவடிக்கை

மாணவர்களுக்கு தகுந்த கல்வித் தகுதியை உருவாக்கி, வேலைவாய்ப்பைப் பெறும் திறன்மிக்கவர்களாக மேம்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்று கிரசென்ட் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத் துணை வேந்தர் சாகுல் ஹமீது பின் அபுபக்கர் தெரிவித்தார்.
வண்டலூர் கிரசென்ட் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், சர்வதேச பட்டயக்கணக்காளர் சங்கம் இணைந்து மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்ற நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பதிவாளர் ஏ.ஆஸாத், சர்வதேச பட்டயக் கணக்காளர் சங்கத் தமிழக மேலாளர் பி.சரவணன்குமார் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனர். பின்னர் துணை வேந்தர் சாகுல் ஹமீது பின் அபுபக்கர் செய்தியாளர்களிடம் கூறியது:
வணிகவியல் கல்வி பயிலும் மாணவர்கள் இந்தியாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் பட்டயக்கணக்காளர் வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் பிரிட்டன் சர்வதேச திறன் மேம்பாட்டுக் கழகம் உருவாக்கியுள்ள பாடத் திட்டத்தை கிரசென்ட் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் வணிகவியல் கல்வி பயிலும் மாணவர்களும் குறைந்த கட்டணத்தில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சர்வதேச கணக்கியல் பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்கள் இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலான வேலைவாய்ப்புகளைப் பெற முடியும்.
நடப்பு ஆண்டில் சர்வதேச கணக்கியல் படிப்பை நிறைவு செய்த 20 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச அளவில் 5 லட்சம் பட்டயக் கணக்காளர்கள் தேவை என எதிர்பார்க்கப்படுகிறது. வணிகவியல் படிப்பு மூலம் சர்வதேச அளவில் வேலைவாய்ப்புகளைப் பெற உதவும் படிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கப்பட உள்ளது. வேலைவாய்ப்புகளை மையப்படுத்தி மாணவர்களின் கல்வித்தகுதி, தொழில் திறனை மேம்படுத்தத் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்றார் சாகுல் ஹமீது பின் அபுபக்கர். 
சர்வதேசத் திறன் மேம்பாட்டுக் கழகம் தென்மண்டலத் தலைவர் தயாமூர்த்தி, துணைப் பதிவாளர் ராஜா ஹுசைன், அறிவியல், மானுடவியல் டீன் டி.அயூப்கான் தாவூத், துறைத் தலைவர் அப்சலூர் ரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com