கஜா புயல்: சென்னையில் தயார் நிலையில் 176 நிவாரண முகாம்கள்

கஜா புயல் காரணமாக சென்னையில் மேலும் 2 நாள்களுக்கு மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்படும் மக்களைத் தங்க வைப்பதற்காக


கஜா புயல் காரணமாக சென்னையில் மேலும் 2 நாள்களுக்கு மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்படும் மக்களைத் தங்க வைப்பதற்காக 176 நிவாரண முகாம்கள், உதவி மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் கூறியது:
கஜா புயல் காரணமாக மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்பு, மேற்பார்வை அலுவலர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளம் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறையை 044 25384510, 25384520, 25384530, 25384540, 25619206, 25619511 ஆகிய தொலைபேசி எண்களிலும், 94454 77205 என்ற கட்செவி அஞ்சல் ( வாட்ஸ் ஆஃப்) எண்ணிலும், g​c​c​c‌o‌n‌t‌r‌o‌l‌r‌o‌o‌m@‌g‌m​a‌i‌l.​c‌o‌ என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
176 நிவாரண முகாம்கள்: மழையால் பாதிக்கப்படும் மக்களைத் தங்க வைக்க 176 நிவாரண முகாம்கள், அங்குள்ளவர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக 4 பொது சமையல் கூடங்கள் ஆகியவை தயார்நிலையில் உள்ளன. தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 60 நபர்கள் அரக்கோணத்திலிருந்து வரவழைக்கப்பட்டு உள்ளனர். மின்சார வாரியத்தின் மூலம் மழைக் காலங்களில் மின்தடை மற்றும் மின்கசிவு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com