போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம்: மின்வாரியம் அறிவுறுத்தல்

மின்சார வாரியத்தில் அரசு வேலை வாங்கித் தரப்படும் என்று போலியாக செய்யப்படும் விளம்பரங்களை எவரும் நம்ப வேண்டாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

மின்சார வாரியத்தில் அரசு வேலை வாங்கித் தரப்படும் என்று போலியாக செய்யப்படும் விளம்பரங்களை எவரும் நம்ப வேண்டாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர் உள்பட அனைத்து பதவிகளிலும் காலி பணியிடங்கள் உள்ளன. 325 உதவி பொறியாளர் பணிக்கு தகுதியுள்ளவர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்களை பெற்றுள்ள மின்சார வாரியம் இதுவரை அதற்கான தேர்வை நடத்தவில்லை. மேலும் 2,000 கள உதவியாளர், 250 கணக்கு இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும் ஆள் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், மின்வாரியத்தில் 2,884 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதாகவும், இதற்கு விண்ணப்பிக்க சில நாள்கள் மட்டுமே அவகாசம் இருப்பதாகவும் வாட்ஸ் -அப் போன்றவற்றில் போலி விளம்பரங்கள், தகவல்கள் அனுப்பப்படுகின்றன. இதுபோன்று பரப்பப்பட்டு வரும் போலி விளம்பரங்களை எவரும் நம்ப வேண்டாம் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியது: மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு முறைப்படி தேர்வு நடத்தி ஆள் தேர்வு செய்யப்படுகிறது. காலிப் பணியிடங்கள் இருந்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இதுதொடர்பாக போலி விளம்பரங்கள் வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுபோன்ற தவறான தகவலை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட உள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com