கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.140 கோடி: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்

கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி ஆடைகளின் தீபாவளிவிற்பனை இலக்காக ரூ.140 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தமிழக
கோ-ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டுமாளிகை விற்பனை நிலையத்தை திறந்து வைத்து ஆடைகளைப் பார்வையிட்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.
கோ-ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டுமாளிகை விற்பனை நிலையத்தை திறந்து வைத்து ஆடைகளைப் பார்வையிட்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.


கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி ஆடைகளின் தீபாவளிவிற்பனை இலக்காக ரூ.140 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் புதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகை விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்தும், தீபாவளி விற்பனையைத் தொடங்கி வைத்தும் அவர் பேசியதாவது:
வாடிக்கையாளர்களைக் கவரவும், தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாகவும் தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் ரூ.2 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி ஆடைகளின் தீபாவளி விற்பனை இலக்காக ரூ.140 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதில், சென்னை மண்டலத்துக்கு மட்டும் ரூ.22.50 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
30 சதவீதம் தள்ளுபடி: அனைத்து விற்பனை நிலையங்களிலும் கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் அரசு தள்ளுபடி வழங்குகிறது. இதை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி, நெசவாளர்களுக்கு நேசக்கரம் நீட்ட வேண்டும் என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சியில், தீபாவளி விற்பனைக்காக புதிதாக வந்துள்ள 1,000 புட்டா சில்க் காட்டன் சேலைகள், மகளிருக்கான பட்டு துப்பாட்டாக்கள், பருத்தி துப்பட்டாக்கள், ஆடை ரகங்கள், அலங்கார கைப்பைகள் மற்றும் ஆடவருக்கான பருத்தி ஆடைகள் ஆகியவற்றை அமைச்சர் அறிமுகம் செய்தார்.
கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர்துறை அரசு முதன்மைச் செயலர் குமார் ஜெயந்த், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் தி.ந.வெங்கடேஷ் உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

சென்னை எழும்பூரில் புதுப்பிக்கப்பட்ட
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com