சென்னை விமான நிலையத்தில் மூலிகைத் தோட்டம்

தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது


தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய விமான நிலைய தெற்கு மண்டலப் பிரிவின் கீழுள்ள விமான நிலையங்களில் மூலிகைத் தோட்டங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதன்கிழமை தேசிய ஆயுர்வேத நாள் கொண்டாடப்படுவதையொட்டி இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் 40 ஆயிரம் மருத்துவத் தன்மை கொண்ட புல், செடி, கொடி மற்றும் மரங்களால் இந்தத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 
விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் மூலம், குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் தெற்கு மண்டலத்தில் உள்ள 21 விமான நிலையங்கள் உள்பட மொத்தம் 40 இடங்களில் புதன்கிழமை காலை 10 முதல் 10.05 மணி வரை இப்பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணி இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஊழியர் குடியிருப்புப் பகுதிகள், ஒலிபரப்பு மற்றும் ரேடார் மையங்களில் மேற்கொள்ளப்பட்டது. 
மசாலாப் பொருள்களை வழங்கக் கூடிய செடிகளும், உடல் உபாதைகளை தடுத்துச் சிகிச்சை அளிக்கும் மூலிகைச் செடிகளும், இத்தோட்டத்தில் நடப்பட்டுள்ளன. ஸ்வச் பாரத் ஸ்வஸ்த் பாரத் என்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். தூய்மை இந்தியா ஆரோக்கியமான இந்தியா என்பது இதன் பொருளாகும்.
சென்னையில் தெற்கு மண்டல ஊழியர் குடியிருப்பு, கேந்திரிய வித்யாலயா, மீனம்பாக்கம், முகலிவாக்கம், போரூர் ரேடார் ஸ்டேஷன், ஏ.டி.எஸ். பிளாக், சென்னை விமான நிலையம், புதிய தீயணைப்பு நிலையத்துக்குப் பின்புறமுள்ள பகுதிகளிலும் மற்றும் ஏ.ஏ.ஐ. ஊழியர் குடியிருப்புப் பகுதியிலும் மூலிகைத் தோட்டம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்ட
தாக இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தெற்கு மண்டல நிர்வாக இயக்குநர் எஸ்.ஸ்ரீகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com