விமானப் படை பயிற்சி வீரர்கள் அணிவகுப்பு

சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்ற 915 வீரர்களின் அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்ற 915 வீரர்களின் அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள, இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில், மெக்கானிக்கல் மற்றும் ஒர்க் ஷாப் என இரு பிரிவுகளில் விமானப்படை வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு பயிற்சி பெற்ற, பிற நட்பு நாடுகளைச் சேர்ந்த 9 வீரர்கள் உள்பட 915 விமானப்படை வீரர்களின் பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பு நடைபெற்றது. தாம்பரம் விமானப்படை பயிற்சி மைய அதிகாரி ஏர் கமோடர் அவானா, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். சிறந்த வீரர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com