விமான நிலையத்தில் 80-ஆவது முறையாக கண்ணாடி உடைந்தது

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில், 35 அடி உயரத்தில் சுவரில் பதித்திருந்த 5 அடி அகலமும், நீளமும் கொண்ட கண்ணாடி உடைந்து விழுந்தது. விமான நிலையத்தில் கண்ணாடி


சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில், 35 அடி உயரத்தில் சுவரில் பதித்திருந்த 5 அடி அகலமும், நீளமும் கொண்ட கண்ணாடி உடைந்து விழுந்தது. விமான நிலையத்தில் கண்ணாடி உடைவது 80-ஆவது முறையாகும்.
சென்னை விமான நிலையத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்கள் ரூ.2,200 கோடி செலவில் நவீன முறையில் கண்ணாடி மாளிகை போல் கட்டப்பட்டது. 
இது கடந்த 2013-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. அது முதல் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது கண்ணாடிகள் உடைந்து விழுவது வாடிக்கையாகிவிட்டது. அவ்வப்போது நடைபெறும் இந்த விபத்துகளில் இதுவரை அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. எனினும் பயணிகள், பயணிகளை வழியனுப்ப வந்தவர்கள், விமான நிலைய தற்காலிகப் பணியாளர்கள், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் என இதுவரை 14 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலையில் 80-ஆவது முறையாக கண்ணாடி உடைந்த அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உள்நாட்டு விமான நிலையத்தின், 19-ஆவது நடைமேடையின் 2-ஆவது தளத்தில் பொருத்தப்பட்டிருந்த 5 அடி நீளமும், 5 அடி அகலமும் கொண்ட கண்ணாடி 35 அடி உயரத்தில் இருந்து பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்து உடைந்து சிதறியது. 
இந்த கண்ணாடி விரிசல் விட்டிருப்பதைக் கண்ட அதிகாரிகள் அதை உடனடியாக மாற்றுவதற்கான முயற்சியை மேற்கொண்டனர். அப்போது கண்ணாடி கீழே விழுந்து சிதறியது. கண்ணாடி உடைந்து விழும் என அதிகாரிகள் முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கையாக இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அதைத் தொடர்ந்து கண்ணாடி விழுந்த இடத்தில் தற்காலிகமாக பிளைவுட் பலகை வைத்து அடைக்கப்பட்டது. இன்னும் ஓரிரு தினங்களில் உடைந்த கண்ணாடிக்கு மாற்றாக வேறொரு கண்ணாடி பொருத்தப்படும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com