சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தவறாக சேர்க்கப்பட்டவர் விடுதலை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தவறாக சேர்க்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவரை விடுதலை செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தவறாக சேர்க்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவரை விடுதலை செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 சென்னை குமரன் நகர் பகுதியில் காட்டுராஜா என்பவரின் வீட்டில் ராஜேந்திரன் }மீனாட்சி தம்பதி வசித்து வந்தனர். இவர்களது 6 வயது மகள் கடந்த 2008 -ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக அதே குடியிருப்பில் வசித்து வந்த கூலித் தொழிலாளி ஐயப்பன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்றம் ஐயப்பனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
 இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஐயப்பன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.விமலா, ராமதிலகம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "இந்த வழக்கில் காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை எனக் கூறி கண்டனம் தெரிவித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி நினைவிழந்த நிலையில் இருந்துள்ளார். சம்பவம் நடந்து 3 மாத காலத்துக்குப் பிறகு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் வீட்டின் உரிமையாளர் காட்டுராஜா தன்னை கடத்திச் சென்றதாகக் கூறியுள்ளார். அந்த வாக்குமூலத்தை விசாரணை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாமல், அப்பாவி இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. எனவே ஐயப்பனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கை மகளிர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர் காட்டுராஜாவை வழக்கில் சேர்த்து 3 மாத காலத்துக்குள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்' அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com