துணை வாக்காளர் பட்டியல் பணி மார்ச் 26-க்குள் முடிவடையும்: மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ்

வாக்காளர் பெயருடன் கூடிய துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி மார்ச் 26-ஆம் தேதிக்குள் முடிவடையும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்டத் தேர்தல் ஆணையருமான ஜி.பிரகாஷ் தெரிவித்தார்


வாக்காளர் பெயருடன் கூடிய துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி மார்ச் 26-ஆம் தேதிக்குள் முடிவடையும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்டத் தேர்தல் ஆணையருமான ஜி.பிரகாஷ் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல், இடைத் தேர்தலையொட்டி, 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையிலும், அதுகுறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தரமணி டைடல் பார்க் வளாகத்தில் ஜி.பிரகாஷ் தலைமையில் மனிதச் சங்கிலி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இதைத் தொடர்ந்து, ஜி.பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியது: மக்களவைத் தேர்தலையொட்டி, புதிய வாக்காளர்களைச் சேர்க்க கடந்த 16-ஆம் தேதி வரை பெறப்பட்ட படிவம் 6-இன்படி வாக்காளர்களின் பெயர் அடங்கிய துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி  வரும் 26-ஆம் தேதிக்குள் முடிவடையும்.
சென்னையில் 48 பறக்கும் படை,  நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் செய்த ஆய்வில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9.74 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார். 
இதையடுத்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com