சர்க்கரை நோய் விழிப்புணர்வுப் பேரணி

சர்வதேச சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்

சர்வதேச சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் திருவள்ளூர் "ஷம்மா சர்க்கரை நோய் சிகிச்சை மையம்' சார்பில் புதன்கிழமை பேரணி நடைபெற்றது.  
ஒவ்வொரு ஆண்டும் சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, இந்த நோய் குறித்தும், உடற்பயிற்சி மூலம் எவ்வாறு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 
அந்த வகையில் திருவள்ளூர் தேரடி அருகே நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு மருத்துவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். ஷலோம் ரிஷப் மையத்தின் நிர்வாகி கெசியா பிரேம்குமார் முன்னிலை வகித்தார். இப்பேரணியை தொழிலதிபர் வருண்குமார் ஜெயின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
திருவள்ளூர் தேரடியில் தொடங்கிய இப்பேரணி மோதிலால் தெரு, வடக்கு ராஜவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கம்பர் தெருவில் நிறைவடைந்தது. இதில் ஹெல்த்கேர் மேலாளர் முருகன், சமூக ஆர்வலர்கள் ராசகுமார், பூண்டி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com