பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வுக் கூட்டம்

கும்மிடிப்பூண்டியில் உள்ள ஷேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வுக்


கும்மிடிப்பூண்டியில் உள்ள ஷேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டியில் உள்ள மகாராஜா அக்ரசன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வுக் கூட்டத்திற்கு ஷேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் அறக்கட்டளைத் தலைவர் மேரி ஆக்சீலியா தலைமை வகித்தார். மேரி பிரியதர்ஷினி வரவேற்றார்.
கும்மிடிப்பூண்டியில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் மற்றும் கேடிவி ஆரோக்கிய உணவுகள் நிறுவனத்துடன் இணைந்து ஷேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் அறக்கட்டளையினர் நடத்திய இந்த நிகழ்வில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய ஆணையர் தயாநிதி பங்கேற்றார்.
நிகழ்வில் பேசிய ஒன்றிய ஆணையர் தயாநிதி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்தும், அவைகளில் இருந்து காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும், டெங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார். இக்கூட்டத்தில், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன அதிகாரி உலகநாதன் சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து, ஷேர் அறக்கட்டளை சார்பாக, குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல், அறிமுகம் இல்லா புதிய நபரிடம் பழகும் முறை, தற்காப்பு முறைகள் குறித்து படக்காட்சிகளுடன் விளக்கப்பட்டது. நிகழ்வில், நான்காம் வகுப்பு மாணவி ச.சஹானா டெங்கு விழிப்புணர்வுப் பாடலைப் பாடி பாராட்டு பெற்றார். தொடர்ந்து, பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்' என்பதை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com