திருத்தணியில் முன்னறிவிப்பு இன்றி மின்தடை: பொதுமக்கள் கடும் அவதி

திருத்தணி பகுதியில், முன் அறிவிப்பு இல்லாமல் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் காலாண்டுத் தேர்வுக்கு படித்து வரும் மாணவ, மாணவிகள் கடும்

திருத்தணி பகுதியில், முன் அறிவிப்பு இல்லாமல் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் காலாண்டுத் தேர்வுக்கு படித்து வரும் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 
திருத்தணி மின்வாரிய கோட்டத்தில், திருத்தணி நகரம், கனகம்மாசத்திரம், பூனிமாங்காடு, கேஜி கண்டிகை, ஆர்கே பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் பொதட்டூர்பேட்டை ஆகிய பகுதிகளில் துணை மின்நிலையங்கள் உள்ளன. 
இதில், நகரம்-1, நகரம்-2, லட்சுமிபுரம், குன்னத்தூர், நாபலூர், பொன்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு திருத்தணி துணைமின் நிலையத்தில் இருந்து தினமும் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. 
இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே முன்னறிவிப்பின்றி மேற்கண்ட பகுதிகளில் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் தூங்க முடியாமல் பல மணி நேரம் வீட்டுக்கு வேளியே காத்திருக்க வேண்டியுள்ளது.
அத்துடன், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செப்டம்பர் 10 -ஆம் தேதி முதல் 22 -ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில், இரவு நேரங்களிலும், ஒரு சில நாள்களில் பகல் நேரங்களிலும் மின்தடை ஏற்படுவதால் தேர்வுக்கு படிக்க முடியாமல் மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். 
இதுகுறித்து மின்சார வாரியத்திடம் தொடர்பு கொண்டால் யாரும் தொலைபேசியை எடுத்துப் பேசுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நாள்தோறும் தங்கள் அன்றாடப் பணிகளை செய்யமுடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். 
இந்நிலையில், புதன்கிழமை பகல் 2 மணிக்கு மின்தடை ஏற்பட்டு, மாலை 6.15 மணி வரையிலும் மின்சாரம் வராததால், நகரவாசிகள் கடும் அவதிப்பட்டனர். 
அதுமட்டுமில்லாமல் திருத்தணி அரசு பொதுமருத்துவமனையில் உள்நோயாளிகள் மின்சாரம் இல்லாமல் கடும் அவதிப்பட்டனர். 
எனவே, இனிவரும் நாள்களில் மின்தடை குறித்து பொதுமக்களுக்கு முன் அறிவிப்பு செய்ய வேண்டும் எனவும், சீரான மின்சாரத்தை வழங்க சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com