விளையாட்டில் பதக்கம் வென்றோர் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் ஊக்க உதவித்

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் ஊக்க உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அருணா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க உதவித் தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நிகழாண்டில் 2018-19-இல் பயிலும் வீரர், வீராகங்கனைகளிடம் இருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.    
இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ரூ.13 ஆயிரமும் ஊக்க உதவித்தொகையாக வழங்கப்படும். இதில்,1.7.2017 முதல் 30.6.2018 முடியவுள்ள காலகட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மேலும், குழுப் போட்டிகள் என்றால் முதல் இரண்டு இடங்கள், தனிநபர் போட்டிகள் என்றால் முதல் 2 இடங்கள் பெற்றவர்கள் ஊக்க உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதியானோர் இணையதளத்தில் விண்ணப்பித்த ஏழு வேலை நாள்களுக்குள் தங்களது அசல் சான்றிதழை சம்பந்தப்பட்ட மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஊக்க உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் 12.3.2019-க்குள் ‌w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-28364322 என்ற தொலைபேசி தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com