வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினால் முதன்மை நிலையை அடையலாம்: மயில்சாமி அண்ணாதுரை

மாணவிகள் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி செயல்பட்டால், வாழ்வில் முதன்மை நிலையை அடையலாம் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

மாணவிகள் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி செயல்பட்டால், வாழ்வில் முதன்மை நிலையை அடையலாம் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
திருத்தணியை அடுத்த பொதட்டூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி சார்பில், "உன்னால் முடியும்' நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஏ.எஸ்.ஜீவானந்தம் தலைமை வகித்தார். திருத்தணி கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் இ.கே.லோகமணி முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் இ.கே.உதயசூரியன் வரவேற்றார்.
 இதில், சிறப்பு அழைப்பாளராக சந்திராயன் 2 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வென்ற  மாணவியருக்கும், சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களை பாராட்டிப்  பரிசு வழங்கினார். 
 தொடர்ந்து, மயில்சாமி அண்ணாதுரை பேசியது:   பொதுத் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவியர் வாய்ப்பு இறுதியானது என்பதை உணர்ந்து, நன்கு திட்டமிட்டு சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், வாழ்வில் முதன்மை நிலையை அடையலாம். அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில் கிடைத்த உணவை உண்டு வந்த நிலையிருந்தது. அதிலிருந்து எந்த காலத்தில் எவ்விதமான பயிரை சாகுபடி செய்ய வேண்டுமென கண்டுபிடித்தவர் உலகின் முதல் விஞ்ஞானி. மாணவியர், ஆசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் தங்களின் எதிர்கால லட்சியத்தை அமைத்துக் கொள்வதைக் கடந்து, சிறந்த விஞ்ஞானியாக தயார்படுத்திக் கொள்ள திட்டமிட்டு முயற்சி செய்ய வேண்டும். உலகில் வளர்ந்த நாடுகள் விண்வெளிக்கு  செயற்கைக் கோள் அனுப்புவதில் பல முறை தோல்விக்கு பின்னரே வெற்றி பெற்றன. ஆனால் இந்தியா மட்டுமே முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றது என்றார் அவர்.
 நிகழ்ச்சியில், கலாம் மாணவர்கள் எழுச்சி இயக்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. அதேபோல் 1998-2000-ஆம் ஆண்டில் பிளஸ் 2 முடித்த முன்னாள் மாணவர்கள் சார்பில், பள்ளிக்கு கணினி வழங்கப்பட்டது. 
நிகழ்ச்சியில் வளரும் அறிவியல் ஆசிரியர் இ.கே.டி.சிவகுமார், ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கணபதி, பெற்றோர்- ஆசிரியர் கழகக் செயலர் பாண்டியன், பள்ளி உதவித் தலைமையாசிரியர் எஸ்.ஆர்.சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com