தேசிய பெண் குழந்தைகள் வார விழா: ஆட்சியர் அழைப்பு

தேசிய பெண் குழந்தைகள் வார விழாவில் பொதுமக்கள் பங்கேற்று, பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பை பலப்படுத்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி


தேசிய பெண் குழந்தைகள் வார விழாவில் பொதுமக்கள் பங்கேற்று, பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பை பலப்படுத்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் சனிக்கிழமை கூறியது: திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் வார விழா திங்கள்கிழமை (ஜன 21) தொடங்கி, ஜன 26-ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. இதன்மூலம் பெண் குழந்தைகளை கருவிலேயே கண்டறிந்து அழிக்கும் கொடிய செயலைத் தடுக்கவும், பெண் குழந்தைகள் கல்வி கற்பதை அதிகரிக்கவும், ஆண் பெண் இனப் பாகுபாடுகளை கலைந்திடவும், பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை அனைவரும் அறியவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் செவ்வாய்க்கிழமை (ஜன 22) மினி மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது.
இதில், பொதுமக்கள் பங்கேற்று பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பை பலப்படுத்திட வேண்டும் என்று உறுதிமொழி மேற்கொள்ள வேண்டும்.
தேசிய பெண் குழந்தைகள் வார விழாவையொட்டி நடைபெறும் இந்த தொடர் ஓட்டத்தில், பங்கேற்க விருப்பம் மற்றும் உடல் திறன் உள்ளவர்கள் திங்கள்கிழமை (ஜன 21) மாலை அலுவலக நேரத்துக்குள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தங்கள் பெயர் மற்றும் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது 9500043404 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் பதிவு செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com