பொதுமக்களுக்கு காப்புக் காடுகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

திருத்தணி வனச் சரக எல்லைக்குட்பட்ட காப்புக்காடுகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை


திருத்தணி வனச் சரக எல்லைக்குட்பட்ட காப்புக்காடுகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 
திருவள்ளூர் மாவட்டம் வன அலுவலர் கிரண் உத்தரவின் பேரில், திருத்தணி வனச் சரக எல்லைக்குட்பட்ட காப்புக்காடுகளில் காட்டுத் தீ ஏற்படாமல் பாதுகாப்பது எவ்வாறு என்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதட்டூர்பேட்டை அருகே உள்ள கொத்தகண்டிகை கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 
இதில் திருத்தணி வனச்சரக அலுவலர் பாஸ்கர் பேசியது: காப்புக்காடுகளில் காட்டுத் தீ ஏற்பட்டால் உடனடியாக அதுகுறித்த தகவலை வனத் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். அதேபோல் காட்டுப்பகுதிகளில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது, மரம் வெட்டுவது, தீவைப்பது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தகவல் தருவதுடன், அவர்களைப் பிடித்து வனத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். சமூக விரோதச் செயல்களில் யாரேனும் ஈடுபடுவது குறித்து தெரியவந்தால் வனச்சரக அலுவலரின் செல்லிடப்பேசி எண்: 07502536545, மற்றும் 044-27660487 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார் அவர்.
தொடர்ந்து, காப்புக்காடுகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 
நிகழ்ச்சியில் வனவர்கள் சுந்தர், பாண்டுரங்கன், வனத்துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com