வன்கொடுமைத் தடுப்பு வழக்கு: 5 பேருக்கு சிறை

போளூர் அருகே தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்கில் ஒருவருக்கு 9 ஆண்டு சிறைத் தண்டனையும், 4 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையுடன் கூடிய அபராதமும் விதித்து திருவண்ணாமலை

போளூர் அருகே தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்கில் ஒருவருக்கு 9 ஆண்டு சிறைத் தண்டனையும், 4 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையுடன் கூடிய அபராதமும் விதித்து திருவண்ணாமலை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

போளூரை அடுத்த மொடையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜூ. இதே பகுதியைச் சேர்ந்தவர் பழனி (43). இவரது குடும்பத்தினர் சங்கரி (34), சீனிவாசன் (60), சிவலிங்கம் (39), சிவக்குமார் (40). ராஜூவுக்கும், பழனி குடும்பத்தினருக்கும் இடையே நிலப் பிரச்னை இருந்து வந்தது.

கடந்த 2013 டிசம்பர் 16-ஆம் தேதி ராஜூ நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பழனி தரப்பினர் ராஜூவிடம் தகராறு செய்து ஜாதி பெயரைச் சொல்லி ஆபாசமாகத் திட்டி, தாக்கினராம். 
இதுகுறித்து போளூர் போலீஸார் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனர்.

இந்த வழக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

வழக்கை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி ஜி.மகிழேந்தி, ராஜூவின் ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டி, தாக்கிய பழனிக்கு 9 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.5 ஆயிரம் அபராதமும், சங்கரி, சீனிவாசன், சிவக்குமார், சிவலிங்கம் ஆகியோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையுடன் தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் 
விதித்து தீர்ப்பளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com