கிராம உதவியாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
 கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஜமாபந்தி படி வழங்க வேண்டும். பழைய முறையிலான ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வு பெறும் கிராம உதவியாளர்களுக்கு கடைசியாக பெறும் ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
 வந்தவாசி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் வட்டத் தலைவர் கே.குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் என்.சிவசண்முகம், வட்டச் செயலர் எம்.அருள்ஜோதி, போராட்டக்குழுத் தலைவர் பி.வி.ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 போளூர்: போளூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு வட்டத் தலைவர் ஆர்.பாஸ்கரன் தலைமை வகித்தார். வட்டச் செயலர் பி.வின்சென்ட், வட்டப் பொருளாளர் எம்.ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக எம்.மெய்யழகன் கலந்து கொண்டு பேசினார்.
 இதில், போளூர் வட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com