செய்யாறில் பழங்கால நாணயங்கள் கண்காட்சி

செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பழங்கால நாணயங்கள், தபால் தலைகள், ரூபாய் நோட்டுகளின் கண்காட்சி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்


செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பழங்கால நாணயங்கள், தபால் தலைகள், ரூபாய் நோட்டுகளின் கண்காட்சி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.
சனிக்கிழமை நடைபெற்ற கண்காட்சி தொடக்க நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்கத் தலைவர் தெய்வ.பொற்பாதம் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.
லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் நந்தகோபால் கண்காட்சியை திறந்து வைத்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயகுமார், பழங்கால நாணயங்கள், தபால் தலைகள், ரூபாய் நோட்டுகள் மற்றும் அரிய வகை புகைப்படங்களை சேகரித்து கண்காட்சிக்கு ஏற்பாடு செய்த சுந்தரமூர்த்தியை பாராட்டினார்.
இந்தக் கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலர் பார்வையிட்டனர். மாவட்ட முன்னாள் ஆளுநர் ரத்தின.நடராஜன், தொழிலதிபர் காளத்தி, மாவட்டத் தலைவர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com