பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயன் பெற கிராமப்புற ஏழை, எளியோர் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராமப்புற ஏழை, எளியோர், பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராமப்புற ஏழை, எளியோர், பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
திருவண்ணாமலை மாவட்ட கிராமப்புறங்களில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், இதர வகுப்பைச் சேர்ந்த வீடற்ற ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில், பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இதற்காக, சமூக, பொருளாதார சாதி வாரியான கணக்கெடுப்பு பட்டியலில் இருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். தற்போது இந்தப் பட்டியலில் பெயர் இல்லாத, மண் சுவராலான வீடு, கச்சா கூரை, கச்சா சுவர்களுடன் கூடிய ஒன்று அல்லது 2 அறைகளுடன் வசிக்கும் தகுதியானோர் இந்தத் திட்டத்தின் கீழ் இனி வருங்காலங்களில் கான்கிரீட் வீடு பெற்று பயன்பெற நிரந்தர காத்திருப்போர் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே, திருவண்ணாமலை மாவட்ட கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கி.ஊ) உரிய விண்ணப்பங்களை அளித்து நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com