செங்கம் செய்யாற்றில் தொடர் மணல் திருட்டு: குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

செங்கம் பகுதியில் பாயும் செய்யாற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருவதால், இந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விரைவில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


செங்கம் பகுதியில் பாயும் செய்யாற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருவதால், இந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விரைவில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
செங்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செங்கல் சூளைகள் ஏராளமாக உள்ளன. இந்தப் பகுதியில் உரிய உரிமம் பெறாமல் கள்ளத்தனமாக நடைபெறும் பல செங்கல் சூளைகளுக்கு செங்கம் பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரி, டிராக்டர்கள் மூலம் செம்மண் திருடப்பட்டு வருகிறது.
இதேபோல, வீடுகள் கட்டுவதற்காக செங்கம் பகுதியில் பாயும் செய்யாற்றில் இருந்து தொடர்ந்து மணல் திருடப்பட்டு வருவதால், இந்த ஆறு ஓடைபோல மாறியுள்ளது. இந்த ஆற்றில் டிராக்டர் உரிமையாளர்கள் கிராமத்தில் உள்ள கூலித் தொழிலாளிகள் மூலம் மணலை சுத்தப்படுத்தி, ஆற்றங்கரையோரம் சேகரித்து விடுகின்றனர். பின்னர், அந்த மணலை மாலை, அதிகாலை வேளைகளில் டிராக்டர்கள் மூலம் அள்ளிச் சென்று ஒரு டிராக்டர் மணலை ரூ.8,000 வரையில் விற்பனை செய்கின்றன்றனர். தொடர்ந்து இதுபோன்று மணல் திருடப்பட்டு வருவதால், செங்கம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால், விரைவில் இந்தப் பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, செங்கம் பகுதியில் செங்கல் சூளைகளுக்கு உரிய அனுமதியின்றி செம்மண் அள்ளப்படுவதையும், செய்யாறு ஆற்றிலிருந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதையும் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கம் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com