பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சேத்துப்பட்டை அடுத்த தத்தனூர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

சேத்துப்பட்டை அடுத்த தத்தனூர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சேத்துப்பட்டு பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் பிரியங்கா தலைமை வகித்து, கண்காட்சியை திறந்து வைத்தார். மேலும், மாணவர்களின் படைப்புகளை அவர் பார்வையிட்டார். நிகழ்ச்சிக்கு பாரதி கல்விக் குழும நிறுவனர் ராதாகிருஷ்ணன், நிர்வாக ஆலோசகர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாளர் கெளரி ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றினார். பள்ளி முதல்வர் சீனிவாசன் வரவேற்றார்.
இந்தப் பள்ளியில் எல்கேஜி முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தங்களுடைய அறிவியல் படைப்புகளை திறம்பட செய்து வைத்திருந்தனர். இதில், சுற்றுச்சூழல், பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள், மாற்றுப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், விண்வெளி ஆராய்ச்சி, வேதியியல் மாற்றங்கள் உள்பட பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இவற்றை சிறப்பு விருந்தினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர். துணை முதல்வர் லெசி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com