வள்ளலார் திருச்சபையில் முப்பெரும் விழா

வேட்டவலம் களத்து மேட்டுத் தெருவில் உள்ள வள்ளலார் திருச்சபை சார்பில், 259-ஆவது மாத அன்னதான விழா, 20-ஆவது ஆண்டு தொடக்க விழா, மழை வேண்டி இயல், இசை, நாடக விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

வேட்டவலம் களத்து மேட்டுத் தெருவில் உள்ள வள்ளலார் திருச்சபை சார்பில், 259-ஆவது மாத அன்னதான விழா, 20-ஆவது ஆண்டு தொடக்க விழா, மழை வேண்டி இயல், இசை, நாடக விழா என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு வள்ளலார் திருச்சபை நிறுவனர் ந.சுப்பிரமணிய பாரதியார் தலைமை வகித்தார். முதல் நிகழ்வாக காலை 9 மணிக்கு சிவப்பிரகாசர், பரஞ்ஜோதி மகான் ஆகியோர் தலைமையில் இசை விழா நடைபெற்றது. காலை 11 மணிக்கு வள்ளலார் புகழுக்குப் புகழ் சேர்ப்பது சிவகாருண்ய பாடலே, ஜீவகாருண்ய பாடலே என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.
பட்டிமன்றத்துக்கு மாதவ.சின்னராஜ் தலைமை வகித்தார். வ.ஞானபிரகாசம் நடுவர் பொறுப்பேற்றார். சிவகாருண்ய பாடலே என்ற தலைப்பில் கவிஞர் லதா பிரபுலிங்கம், பாக்கியலட்சுமி, உமாதேவி ஆகியோரும், ஜீவகாருண்ய பாடலே என்ற தலைப்பில் தேவிகாராணி, மோகனாம்பாள், பச்சையம்மாள் ஆகியோரும் பேசினர்.
மாலை 3 மணிக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட அகவை முதிர்ந்த தமிழறிஞர் என்ற விருதை பெற்ற வள்ளலார் திருச்சபை நிறுவனர் ந.சுப்பிரமணிய பாரதியாரை கவிஞர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள், பஜனை குழுவினர்கள், ஊர் முக்கியப் பிரமுகர்கள் வாழ்த்தினர்.
விழாவையொட்டி, காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் சுமார் 750 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வள்ளலார் திருச்சபை நிறுவனர் ந.சுப்பிரமணிய பாரதியார் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com