வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

காஷ்மீரில் வீர மரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காஷ்மீரில் வீர மரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சண்முகா தொழிற்சாலை கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி தலைமை வகித்தார். கல்லூரிச் செயலரும், தாளாளருமான என்.குமார், பொருளாளர் கே.ராஜேந்திரகுமார், கல்லூரி முதல்வர் கே.ஆனந்தராஜ், கல்விப்புல முதன்மையர் அழ.உடையப்பன் உள்பட கல்லூரி நிர்வாகிகள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வீர மரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல, சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி வீர மரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
செய்யாறு: செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மாணவர்கள் கைகளில் மெழுகுவர்த்தியை  ஏந்தியப்படி மௌன ஊர்வலம் நடத்தினர். 
இந்த ஊர்வலம் பேருந்து நிலையம், காந்தி சாலை, மார்க்கெட் வீதி, வைத்தியர் தெரு, பெரிய தெரு, பங்களா தெரு வழியாகச் சென்றும் மீண்டும் ஆண்கள் பள்ளியை அடைந்தது. தொடர்ந்து, அங்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தினர்: புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், செய்யாறு வட்டாட்சியர் அலுவலகம் அருகே வீர மரணம் அடைந்த தமிழக வீரர்கள் 2 பேர் உள்பட சுமார் 40 வீரர்கள் அடங்கிய பதாகை வைக்கப்பட்டு, மாலை அணிவித்து மெழுகுவர்த்தியை ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com