அதிமுக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் 2 ஆண்டுகால சாதனைகள், நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள் குறித்த தெருமுனை பிரசார

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் 2 ஆண்டுகால சாதனைகள், நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள் குறித்த தெருமுனை பிரசார கூட்டங்கள் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றன.
சேத்துப்பட்டை அடுத்த மொடையூர் கிராமத்தில் நடைபெற்ற தெருமுனை பிரசாரக் கூட்டத்துக்கு ஒன்றியச் செயலர் பி.ராகவன் தலைமை வகித்தார். ஒன்றிய மாணவரணிச் செயலர் ரவி, நிர்வாகிகள் திருஞானம், முருகையன், தண்டபாணி உள்ளிட்டோர் கலந்துகொணடனர்.
இதேபோன்று, ராந்தம், செம்மியமங்கலம், அல்லியாளமங்கலம், மட்டபிறையூர் ஆகிய கிராமங்களிலும் தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன.
கீழ்பென்னாத்தூர்:  கீழ்பென்னாத்தூர் ஒன்றிய அதிமுக சார்பில், தெருமுனை பிரசார கூட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.
கீழ்பென்னாத்தூரை அடுத்த செவரப்பூண்டி, மேக்களூர், கீக்களூர், கத்தாழம்பட்டு, கல்பூண்டி, ஆராஞ்சி, சோமாசிபாடி, கடம்பை, கழிக்குளம், வழுதலங்குணம், கனபாபுரம், கானலாபாடி ஆகிய ஊர்களில் நடைபெற்ற தெருமுனை பிரசாரக் கூட்டங்களுக்கு அதிமுக ஒன்றியச் செயலர் ஆர்.பாஷ்யம் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத் தலைவர் சதாசிவம், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலர் தொப்பளான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமைக் கழகப் பேச்சாளர் தஞ்சை மோகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். கூட்டங்களில், அதிமுக ஊராட்சிச் செயலர்கள் வேடநத்தம் ஏழுமலை, சுந்தரமூர்த்தி, ஞானசேகரன், இளைஞரணிச் செயலர் சோழன், கிளைச் செயலர்கள் பாலு, சேகர், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆரணி: மேற்கு ஆரணி ஒன்றியம், காமக்கூர் கிராமத்தில் அதிமுக சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு அரசு வழக்குரைஞர் க.சங்கர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஆரணி மக்களவைத் தொகுதி உறுப்பினர் செஞ்சி வெ.ஏழுமலை, 
தலைமைக் கழகப் பேச்சாளர் அமுதா அருணாச்சலம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், மேற்கு ஒன்றியச் செயலர் அரையாளம் எம்.வேலு, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் புங்கம்பாடி சுரேஷ், கே.பி.நிர்மல்குமார், தேவிகாபுரம் சகாயம், மணிகண்டன், ஊராட்சிச் செயலர் சுப்பிரமணி, கிளைச் செயலர் விஜயரங்கன், சிறுபான்மைப் பிரிவு வாஜ்அகமது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com