27 நட்சத்திரக் கோயிலில் 108 கோ பூஜை

செய்யாறை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திரக் கோயிலில் 108 கோ பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

செய்யாறை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திரக் கோயிலில் 108 கோ பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உள்ள உக்கம்பெரும்பாக்கம் கிராமத்துக்கு தெற்கே கூழமந்தல் ஏரிக்கரையில் ஸ்ரீநட்சத்திர விருட்ச விநாயகர், 27 நட்சத்திர அதிதேவதைகளின் கோயில்கள் அமைந்துள்ளன.
இந்தக் கோயிலில் காணும் பொங்கலையொட்டி, வியாழக்கிழமை காலையில் நட்சத்திர விருட்ச விநாயகர், 27 நட்சத்திர அதிதேவதைகள், சனீஸ்வரர், ராகு, கேது பகவான்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, 108 கோ பூஜை நடைபெற்றது. இதையொட்டி, உத்ஸவர்  ஸ்ரீநட்சத்திர விருட்ச விநாயகர் வீதியுலா வந்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர், பசுக்களை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com