பாரதியார் பிறந்த நாள் விழா

ஆம்பூர் அருகே ராமச்சந்திராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாரதியாரின் 137-ஆவது பிறந்த நாள்  விழா

ஆம்பூர் அருகே ராமச்சந்திராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாரதியாரின் 137-ஆவது பிறந்த நாள்  விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் சரஸ்வதி தலைமை வகித்தார்.  மாணவ, மாணவியர் பாரதியார் வேடமணிந்து மாறுவேடப் போட்டியில் பங்கேற்றனர். இதில் பங்குபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பாரதியார் கவிதைகள் வாசிக்கப்பட்டன.

வாணியம்பாடியில்...
வாணியம்பாடி பாரதி தமிழ்ச் சங்கம் சார்பில் பெருமாள்பேட்டையில் நடைபெற்ற விழாவில் பாரதியாரின் உருவச் சிலைக்கு பாரதி தமிழ்ச் சங்கம் தலைவர் பேராசிரியர் ப.சிவராஜ், செயலாளர்  வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

குடியாத்தத்தில்...
குடியாத்தம் சூரியோதயா தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியை ஜெனீப்பர்பிலிப் தலைமை வகித்தார். ஆசிரியர் எம். சுந்தரமூர்த்தி வரவேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர் இளவரசன் பாரதியார் குறித்து சிறப்புரையாற்றினார். 
பாரதியாரின் வாழ்க்கை வரலாறு குறித்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அரசு வழக்குரைஞர் கே.எம். பூபதி பரிசுகளை வழங்கிப் பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com