வேலூர் கோட்டையில் காதலர்களுக்கு அனுமதி மறுப்பு

காதலர் தினத்தையொட்டி, அசம்பாவிதங்களைத் தவிர்க்க வேலூர் கோட்டையில் காதல் ஜோடிகளுக்கு போலீஸார் வியாழக்கிழமை அனுமதி மறுத்தனர்.

காதலர் தினத்தையொட்டி, அசம்பாவிதங்களைத் தவிர்க்க வேலூர் கோட்டையில் காதல் ஜோடிகளுக்கு போலீஸார் வியாழக்கிழமை அனுமதி மறுத்தனர்.
நாடு முழுவதும் காதலர் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காதலர்கள் பொது இடங்கள், பூங்காக்களில் சந்தித்துக் கொள்வது வழக்கம். அதேசமயம், காதல் தினத்துக்கு தமிழகத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. 
இதனால், வேலூர் மாவட்டம் முழுவதும் பூங்காக்கள், கோயில்களில் போலீஸார் வியாழக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதன்படி, வேலூர் கோட்டை நுழைவு வாயிலேயே தடுப்பு வேலி அமைத்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் காதல் ஜோடிகளை வேலூர் கோட்டைக்குள் செல்ல அனுமதி மறுத்தனர். இதனால், கோட்டை வளாகத்துக்குள் பொதுமக்கள் கூட்டம் வழக்கத்தைவிட குறைவாகக் காணப்பட்டது. மேலும், பெரியார் பூங்காவில் பராமரிப்புப் பணி காரணமாக விடுமுறை பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனால், காதல் ஜோடிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதனிடையே, இந்து முன்னணி மாநகர ஒருங்கிணைப்பாளர் ஆதிமோகன் தலைமையில் அந்த அமைப்பினர் மாலையுடன் காந்தி சிலை முன் திரண்டர். அவர்களையும் கோட்டைக்குள் செல்ல போலீஸார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் கோஷங்கள் எழுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com