ஜோலார்பேட்டையில் நின்று செல்லும் கோவை-திருப்பதி இன்டர்சிட்டி ரயில்

ஜோலார்பேட்டையில் நின்று சென்ற கோயம்புத்தூர்-திருப்பதி இன்டர்சிட்டி ரயிலுக்கு சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.


ஜோலார்பேட்டையில் நின்று சென்ற கோயம்புத்தூர்-திருப்பதி இன்டர்சிட்டி ரயிலுக்கு சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோயம்புத்தூரில் இருந்து திருப்பதிக்கு வாரத்துக்கு மூன்று நாள்கள் இயக்கப்படும் இன்டர்சிட்டி விரைவு ரயில் ஜோலார்பேட்டையில் நிற்பதில்லை. இதனால், திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். இந்த ரயில் ஜோலார்பேட்டையில் நின்று செல்வதற்கு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினரும், பொதுமக்களும் தமிழக பத்திரப் பதிவு மற்றும் வணிக வரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணியிடம் கடந்த மாதம் கோரிக்கை வைத்தனர். அவர் இது தொடர்பாக சென்னை தென்னக ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு அளித்தார்.
அதை ஏற்று, கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயில் சனிக்கிழமை முதல் காலை 10 மணிக்கு ஜோலார்பேட்டையில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. 
இதேபோல், திருப்பதியில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயில் மாலை 5.25 மணிக்கு ஜோலார்பேட்டையில் நின்று செல்லும் என ரயில்வே அதிகாரிகள் அறிவித்தனர். 
இதையடுத்து, சனிக்கிழமை மாலை ஜோலார்பேட்டையில் மாலை 5.25 மணிக்கு நின்ற அந்த விரைவு ரயிலுக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் நகரமன்றத் தலைவர் வசுமதி தலைமை வகித்தார். 
ரயில் நிலைய மேலாளர் சுந்தரமூர்த்தி, நிலைய வணிக மேற்பார்வையாளர் பிரகாஷ்பாபு, பயணிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை எம்.பி. வனரோஜா கலந்து கொண்டார்.

=

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com