நான்கு வழிச் சாலையாக மாறுகிறது திருப்பத்தூர் இருவழிச்சாலை: பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பத்தூர் இருவழிச் சாலை நான்கு வழிச் சாலையாக மாறுவதையடுத்து, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


திருப்பத்தூர் இருவழிச் சாலை நான்கு வழிச் சாலையாக மாறுவதையடுத்து, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் இரண்டாவது பெரிய நகரமாகும். 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வசித்து வருகின்றனர். இங்கு எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.
மேலும், நகர்ப்புற சாலையின் அகலம் மிகக் குறுகியது. இதில் கனரக வாகனங்கள் செல்வது, வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமப்படுவது வழக்கம். மேலும், சென்னையிலிருந்து சேலம், ஈரோடு, கோவை செல்லும் கார், வேன், லாரி உள்ளிட்டவை திருப்பத்தூரை கடந்துதான் செல்லவேண்டும். இதனால் திருப்பத்தூர் நகர பிரதான சாலை எப்போதும் மக்கள் மற்றும் வாகன நெரிசலுடன் காணப்படும். இதனால், அவ்வப்போது விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், திருப்பத்தூர் இருவழிச் சாலை, நான்கு வழிச்சாலையாக மாற்றியமைக்கப்பட உள்ளது என்னும் தகவலால் திருப்பத்தூர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அவர்கள் கூறியது:
வாணியம்பாடியில் இருந்து 45 கி.மீ.தொலைவுக்கு நான்கு வழிச்சாலை அமைய உள்ளது. இதில், வேலூர் மாவட்ட எல்லையில் 32 கி.மீ. வரையும், கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் 13 கி.மீ. வரையும் சாலை அமையும். இச்சாலை சுமார் 15 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும். தேசிய நெடுஞ்சாலை வேலூர் கோட்டம் சார்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தில்லிக்கு  அனுப்பப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
புறவழிச் சாலை: கிராமச் சாலை திட்டத்தின்படி திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையில் உள்ள தாமலேரிமுத்தூரில் இருந்து கதிரிமங்கலம் மற்றும் கசிநாயக்கன்பட்டி வழியாக ஆதியூர் ராச்சமங்கலம் பிரதான சாலையில் சென்றடைகிறது. இந்த நான்கு வழிச்சாலை மற்றும் புறவழிச்சாலை திட்டங்கள் குறித்த அறிவிப்பால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com