முதல்வர் கோப்பைக்கான பளுதூக்கும் போட்டி: வேலூர் மாவட்ட அணி சாம்பியன்

மாநில அளவில் முதல்வர் கோப்பைக்கான பளுதூக்கும் போட்டியில் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில்

மாநில அளவில் முதல்வர் கோப்பைக்கான பளுதூக்கும் போட்டியில் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் வேலூர் மாவட்ட அணிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றன. 
தமிழக முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான பளுதூக்கும் போட்டிகள் வேலூர் மாவட்டம் ஆற்காடு பூங்கோடு சித்தீஸ்வரா பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 17-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றன. 
இப்போட்டிகளில், தமிழகத்தில் இருந்து 224 ஆண்கள், 175 பெண்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 
ஆண்கள் பிரிவில் 56 , 62, 69 , 77, 85, 94, 105 ஆகிய எடைப் பிரிவுகளிலும், பெண்கள் பிரிவில் 48 , 53 , 58,  63, 69, 75 ஆகிய எடைப் பிரிவுகளிலும் போட்டிகள்  நடத்தப்பட்டன.
இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் 182 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த வேலூர் மாவட்ட அணிக்கு ரூ. 8 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 167 புள்ளிகள் பெற்று  2-ஆம் இடம் பிடித்த சென்னை மாவட்ட அணிக்கு ரூ. 6 லட்சமும், 160 புள்ளிகள் பெற்று 3-ஆம் இடம் பிடித்த தூத்துக்குடி மாவட்ட அணிக்கு ரூ. 4 லட்சமும் வழங்கப்பட்டது.
பெண்கள் பிரிவில் 183 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த வேலூர் மாவட்ட அணிக்கு ரூ. 7 லட்சமும், 143 புள்ளிகள் பெற்று 2-ஆம் இடம் பிடித்த சென்னை மாவட்ட அணிக்கு ரூ. 5.25 லட்சமும், 142 புள்ளிகள் பெற்று 3-ஆம் இடம் பிடித்த தூத்துக்குடி மாவட்ட அணிக்கு ரூ. 3.50 லட்சமும் வழங்கப்பட்டது. 
இந்தப் பரிசுத் தொகைக்கான காசோலைகள், கோப்பைகளை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் செவ்வாய்க்கிழமை வழங்கினார். 
நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயகுமாரி, வேலூர் மாவட்ட பளுதூக்கும் சங்கத் தலைவர் சங்கர், சிறப்பு பளுதூக்கும் பயிற்சி மைய மேலாளர் உமாசங்கர், சித்தீஸ்வரா பொறியியல் கல்லூரியின் தாளாளர் தரணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com