நாராயணி பீடத்தில் 24-இல் மேதா சூக்த யாகம்

வேலூர்  நாராயணி பீடத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்காக மேதா சூக்த யாகம் வரும் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.

வேலூர்  நாராயணி பீடத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்காக மேதா சூக்த யாகம் வரும் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.
வேலூர், ஸ்ரீபுரம், நாராயணி பீடம் ஆன்மிகத்துடன் பல்வேறு சமுதாய நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களில் ஒன்றான வித்யா நேத்ரம் என்ற திட்டத்தின் கீழ் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டி மேதா சூக்த யாகமும், சரஸ்வதி யாகமும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த யாகங்களில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று சக்தி அம்மாவிடம் ஆசி பெறுவது வழக்கம்.
இதன்படி, இவ்வாண்டு மேதா சூக்த யாகமும், சரஸ்வதி யாகமும் நாராயணி பீடத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. சரஸ்வதி தேவிக்கு நடைபெறும் இந்த யாகத்தில் பங்கேற்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஆசிர்வதிக்கப்பட்ட எழுதுகோலை சக்தி அம்மா வழங்க உள்ளார்.
நிகழ்ச்சியில், தமிழக ஆவின் மேலாண்மை இயக்குநர் சி.காமராஜ், வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.மார்ஸ், கல்வியாளர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com