அதிமுக-பாமக கூட்டணி: மக்களால் புறக்கணிக்கப்படும்

மாறி மாறி கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த அதிமுக-வும், பாமக-வும் தேர்தலுக்காக அமைத்துள்ள கூட்டணி மக்களால் புறக்கணிக்கப்படும்' என்

மாறி மாறி கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த அதிமுக-வும், பாமக-வும் தேர்தலுக்காக அமைத்துள்ள கூட்டணி மக்களால் புறக்கணிக்கப்படும்' என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
வேலூரில் சனிக்கிழமை நடைபெற்ற நூல் வெளியிட்டு விழாவில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குத் தேவையான தொகுதிகளின் பட்டியலை அளித்துள்ளோம். ஓரிரு நாள்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும். பின்னர், எந்தெந்த தொகுதி என்பதை அறிவிப்போம். திமுக கூட்டணியில் தேமுதிக அல்லது மற்ற கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின்தான் முடிவு செய்வார். 
அதிமுகவும், பாமகவும் கூட்டணிக்கு முன்பு மாறி மாறி கடுமையாக விமர்சித்துக் கொண்டதை மக்கள் அறிவர். எனவே, அதிமுக, பாமக அமைத்துள்ள கூட்டணி மக்களால்  புறக்கணிக்கப்படும் கூட்டணியாகத்தான் அமையும். 
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்துள்ளன. அந்த அடிப்படையில், தமிழகத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்துள்ள திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போய் விட்டார். அவரது நிலை என்ன என்பது குறித்து குற்றப் புலனாய்வுத் துறை மூலம் ஆய்வு செய்து அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com