ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் 108 பால்குட ஊர்வலம்

ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, 108 பால்குட ஊர்வலம்,

ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, 108 பால்குட ஊர்வலம்,  பாலமுருகனடிமை சுவாமிகள் மெய்ஞானம் பெற்ற 52-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றன.
 விழாவை முன்னிட்டு, காலை விநாயகர் பூஜையும், 108 பால்குடங்களை வைத்து சிறப்புப் பூஜையும் செய்யப்பட்டன. மலையடிவாரத்தில் உள்ள துர்க்கையம்மன் கோயில் முன்பு  பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில், பால்குடங்கள் ஊர்வலமாக மலைவலம் வந்து மூலவர் வள்ளி , தெய்வானை சமேத பாலமுருகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, மலையடிவாரத்தில்   அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பாலமுருகனுக்கு சிறப்புப் பூஜை செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.
 விழாவில், கலவை சச்சிதானந்த சுவாமிகள், திருவலம் சாந்தா சுவாமிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com