தெலுங்கு மொழியில் பொதுத் தேர்வு வினா-விடை: ஐவிடிபி வெளியீடு

தெலுங்கு மொழிப் பள்ளியில் படித்து பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஐவிடிபி இலவச வினா-விடை கையேட்டை வெளியிட்டது.

தெலுங்கு மொழிப் பள்ளியில் படித்து பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஐவிடிபி இலவச வினா-விடை கையேட்டை வெளியிட்டது.
ஐவிடிபி தொண்டு நிறுவனமானது மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் 2 லட்சத்துக்கும் அதிகமான கிராமப்புற ஏழை பெண்களின் வாழ்வில் பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கல்வி வளர்ச்சியிலும் பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது.
ஆண்டுதோறும்  சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு வெற்றி நம் கையில் என்ற வினா-விடை தொகுப்பு நூலை தயாரித்து அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இலவசமாக வழங்கி வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தெலுங்கு மொழியில் பள்ளி பொதுத் தேர்வை எழுதும் மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட வினா-விடை கையேட்டை ஒசூரில் உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (நவ.9) நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டது .
கிருஷ்ணகிரி மாவட்ட  ஆட்சியர் சு.பிரபாகர், இந்த கையேட்டை வெளியிட, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் பேசியது: 
தெலுங்கு மொழிப் பேசும் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில் இந்த கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 11 ஆண்டுகளாக  10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக ரூ.3.80 கோடி செலவில் இத்தகைய கையேடு வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com