கொத்தடிமையாக இருந்த சிறுவன் மீட்பு

கிருஷ்ணகிரி அருகே நீர் நிலையில் வாத்து மேய்த்துக் கொண்டு, கொத்தடிமையாக இருந்த 14 வயது சிறுவனை வருவாய் கோட்டாட்சியர்



கிருஷ்ணகிரி அருகே நீர் நிலையில் வாத்து மேய்த்துக் கொண்டு, கொத்தடிமையாக இருந்த 14 வயது சிறுவனை வருவாய் கோட்டாட்சியர் திங்கள்கிழமை மீட்டார்.
சென்னையில் கடந்த மாதம் 19-ஆம் தேதி, கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றார். அப்போது, வேலூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், கடாம்பூரைச் சேர்ந்த வள்ளி பேசும்போது, தனது மூன்றாவது மகன் கடந்த 5 ஆண்டுகளாக கிருஷ்ணகிரியில் கொத்தடிமையாக இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து, தேசிய ஆதிவாசி தோழமைக் கழகத்தினர், கிருஷ்ணகிரியில் மேற்கொண்ட விசாரணையில் வள்ளியின் கணவர் சரவணன், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 ஆயிரம் பெற்றுக் கொண்டு, கிட்டம்பட்டியைச் சேர்ந்த பாபு என்பவரிடம் கொத்தடிமையாக சிறுவனை விட்டுச் சென்றது தெரியவந்தது.
மேலும், கொத்தடிமையான சிறுவன், கிருஷ்ணகிரி, ஈரோடு, விழுப்புரம் மற்றும் கேரள மாநிலத்தில் வாத்து மேய்க்கும் பணியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, தேசிய ஆதிவாசி தோழமை கழகத்தினர், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் என்.சரவணிடம் இதுகுறித்து புகார் மனு அளித்தனர்.
வருவாய் கோட்டாட்சியர் என்.சரவணன், கிருஷ்ணகிரி அருகே தேவசமுத்திரம் கிராமத்தில் உள்ள நீர் நிலையில், வாத்து மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனை மீட்டு, தாய் வள்ளியிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தார். மேலும், சிறுவனை கொத்தடிமையாக வைத்திருந்த பாபுவின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து வருவாய்த் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com