கோரிக்கைகளை வலியுறுத்தி முதுநிலை ஆசிரியர்கள் மனு

முதுநிலை ஆசிரியர்களை நீட் தேர்வு பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டதை ரத்து 

முதுநிலை ஆசிரியர்களை நீட் தேர்வு பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரியிடம் மனு அளித்தனர்.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பின் சார்பில், மாவட்டத் தலைவர் ப.கோபி தலைமையில் அளித்த கோரிக்கை மனு விவரம்: நீட் தேர்வு பயிற்சிக்கு சுழற்சி முறையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். நீட் தேர்வு பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர்களாக முதுநிலை ஆசிரியர் நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். 
நீட் தேர்வு பயிற்சியிலிருந்து விலக்கு கோரும் ஆசிரியர்களுக்கு விலக்களிக்க வேண்டும். மார்ச் 2018-ஆம் ஆண்டில் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வில் பணியாற்றிய முதுநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள உழைப்பூதிய நிலுவைத் தொகை அனைத்தையும் உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com