கிருஷ்ணகிரியில் இன்று ஆன்மிக அரசியல் பிரசாரம்: அர்ஜூன் சம்பத் பங்கேற்பு

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம், நாச்சிக்குப்பத்திலிருந்து ஆன்மிக அரசியல் பிரசாரத்தை இந்து மக்கள் கட்சியின்


நடிகர் ரஜினிகாந்த் பிறந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம், நாச்சிக்குப்பத்திலிருந்து ஆன்மிக அரசியல் பிரசாரத்தை இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் ஞாயிற்றுக்கிழமை (செப்.23) தொடக்கி வைக்கிறார்.
இதுகுறித்து ஒசூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகத்தில் ஆன்மிக அரசியல் வளர வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் 108 நாள்கள் ஆன்மிகப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 50 ஆண்டு கால திராவிட ஆட்சியில் தமிழகம் பெரும் வீழ்ச்சிக்குச் சென்றுவிட்டது. தேசிய இயக்கங்கள், இந்து சமய ஆன்மிக இயக்கங்கள் மேம்பட தற்போது நல்ல வாய்ப்பு அமைந்திருக்கிறது. எனவே, தமிழகத்தில் ஆன்மிக அரசியல் கொள்கைகளை விளக்கும் பிரசாரமாக இது அமையும்.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில்தான் மின்வெட்டு இல்லாத மின் மிகை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மத்திய அரசின் திட்டங்கள் அதிக அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் இப் பிரசாரம் நடைபெறும்.
இந்து மக்கள் கட்சி ஆன்மிக அரசியல் கொள்கை உடையது. ரஜினியும், ஆன்மிக அரசியலைத் தொடங்கவுள்ளார். இதனால்தான் ரஜினி பிறந்த ஊரிலிருந்து பிரசாரத்தைத் தொடங்க உள்ளோம். தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்த மக்களவைக்கும், சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகமானவை. முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை. தேர்தல் சீர்திருத்தங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அனைத்து கட்சிகளின் சின்னங்களையும் முடக்க வேண்டும். கட்சிகளுக்கு சுயேச்சையாக சின்னங்களை வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் வரிகளைக் குறைக்க வேண்டும். ஜிஎஸ்டி-க்குள் எரிபொருள்களைக் கொண்டுவர வேண்டும். எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும். சுங்கக் கட்டண உயர்வைக் குறைக்க வேண்டும். தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com