சூசூவாடியில் 125 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல்

சூசூவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகளை தொடக்கி வைத்து, 125  மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளை


சூசூவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகளை தொடக்கி வைத்து, 125  மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் வியாழக்கிழமை வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சூசூவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி ஆட்சியர் பேசியது: தமிழக அரசு கல்வித் துறைக்காக எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி செயல்படுத்தி வருகிறது. அவற்றில் விலையில்லா பாடப்புத்தகம், வண்ண சீருடை, புத்தகப்பை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அதே போல நவீனதொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளன. இது மாணவ, மாணவியருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் கல்வித் தரம் சிறப்பாக அமையும்.
இப்பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி வேண்டும் என்ற கோரிக்கை உடனடியாக செய்து கொடுக்கப்படும். மேலும், கூடுதலாக வகுப்பறை மற்றும் ஆய்வகம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளீர்கள். இக்கோரிக்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்பள்ளியைச் சேர்ந்த 125 மாணவ, மாணவியருக்கு தலா ரூ.12,275 வீதம் மொத்தம் ரூ.15 லட்சத்து 34 ஆயிரத்து 375 மதிப்பிலான மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை மாணவ, மாணவியர் சிறப்பாக பயன்படுத்தி தங்களின் கல்வித்தரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலர் நரசிம்மன், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ராஜசேகர்,ஆனந்த ரெட்டி, ஸ்ரீதர், ராமசந்திரப்பா, பள்ளித் தலைமையாசிரியர் தேவசம்வர்த்தினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com