ஒசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா

ஒசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோயில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும்

ஒசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோயில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள்  குவிந்தனர். இதனால் ஒசூர் நகரமே விழாக் கோலம் பூண்டது.
நிகழாண்டு மார்ச் 13-இல் இக் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதன்கிழமை தேரோட்டத்தில் 4 மாட வீதியில் சென்று உற்சவ மூர்த்தி சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
முதலில் சிறிய தேரில் விநாயகர் பவனி வந்தார். அதைத் தொடர்ந்து பெரிய தேரில் அருள்மிகு மரகதாம்பாள் சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதைத் தொடர்ந்து
3-ஆவது தேரில் அருள்மிகு மரகதாம்பாள் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேர்ப்பேட்டை ஸ்ரீ கல்யாண சூடேஸ்வரர் கோயிலில் எதிரில் காலை 10.30 மணிக்கு கிழக்கு மாட வீதியில் தொடங்கிய தேர் ஊர்வலம் மாலையில் நிலை நிறுத்தப்பட்டது. விழாவை முன்னிட்டு ஒசூர் பேருந்து நிலையம் அருகிலும், எதிரிலும், பெங்களூரு சாலை, வட்டாட்சியர் சாலை, காந்தி சாலை, ரயில் நிலையம், தேர்ப்பேட்டை, ராயக்கோட்டை சாலை, நேதாஜி சாலை, ஏரித் தெரு, தேன்கனிக்கோட்டை சாலை உள்ளிட்ட நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. ஒசூர் முழுவதும் தேர்த்திருவிழா முன்னிட்டு விழாக் கோலம் பூண்டிருந்தது. ஒசூர், சிப்காட், அட்கோ போலீஸார் பாதுகாப்புப் பணியில்
ஈடுபட்டிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com