சங்ககிரியில் ஆழ்துளைக் கிணற்றை சீரமைத்து குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை

சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட 6-ஆவது வார்டு மத்தாளி காலனி பகுதியில் ஆழ்துளைக் கிணற்றின் குழாய்கள், மின் இணைப்பை சீரமைத்து குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டுமென்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடு

சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட 6-ஆவது வார்டு மத்தாளி காலனி பகுதியில் ஆழ்துளைக் கிணற்றின் குழாய்கள், மின் இணைப்பை சீரமைத்து குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டுமென்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்ககிரி பேரூராட்சி மத்தாளி காலனியில் 176 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு பேரூராட்சி சார்பில் புள்ளாகவுண்டம்பட்டியிலிருந்து 20 நாள்களுக்கு ஒருமுறை காவிரி நீர் வழங்கப்படுகிறது. இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் ஊர் பொதுக்கிணற்றின் அருகே சில வருடங்களுக்கும் முன்பு ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. அதில் உள்ள மின் இணைப்பு, குழாய்கள் சேதமடைந்துள்ளதை சரி செய்தால் அப்பகுதிக்கு போதிய குடிநீர் கிடைக்க வாய்ப்புள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து சங்ககிரியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற குறைதீர் கூட்த்தில் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
எனவே மத்தாளி காலனிப் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றுக்கு செல்லும் மின் இணைப்பு, குழாய்களை சீரமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்துத் தர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com