மன நலப் பயிற்சி மேற்கொள்வோருக்கு மருத்துவம் தேவையில்லை

மன நலப் பயிற்சி மேற்கொள்வோர்க்கு மருத்துவம் தேவையில்லை என்றார் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்தார்.


மன நலப் பயிற்சி மேற்கொள்வோர்க்கு மருத்துவம் தேவையில்லை என்றார் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்தார்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் தேசிய மருத்துவ உளவியல் மூன்று நாள் பயிற்சிப் பட்டறையை வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்து துணைவேந்தர் பொ.குழந்தைவேல் பேசியது:
உடல் நலமும், மன நலமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. மனநலக் கேடுகள் உடல் நலத்தையும், உடல் நலக் கேடுகள் மன நலத்தையும் பாதிக்க வல்லவை. மன அழுத்தங்களின் போது உடலின் வேதிச் சமநிலை பெரும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. உடனடித் தீர்வுக்காக ஏங்குவோர் மாத்திரை மருந்துகளை உட்கொள்கின்றனர். வேதி மாத்திரை, மருந்துகளைப் பற்றி சரியான புரிதல் இல்லாதவர்கள் அவற்றை மிக அதிக அளவில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுக்கும் போது அவை மிகப் பெரும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.பெரும்பாலான நோய்களுக்கு நிரந்தரத் தீர்வு என்பது மனநலப் பயிற்சிகளில் தான் உள்ளது. மனநலப் பயிற்சிகளை சரியாகப் பேணுவதன் மூலம் உடலில் வேதிச் சமநிலையை ஏற்படுத்த இயலும் என்றார்.
இப்பயிற்சியை அமெரிக்க மருத்துவ ஹிய்ப்னாடிச கழகத்தில் பயிற்சி பெற்ற பெரியார் பல்கலைக்கழக உளவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கதிரவன் அளிக்கிறார். இப்பயிற்சி முகாமை உதவிப்பேராசிரியர் கே.என். ஜெயக்குமார் ஒருங்கிணைத்து நடத்துகிறார். தொடக்க விழாவில், பேராசிரியர் வெங்கடாசலம், உதவிப் பேராசிரியர்கள் நித்தியானந்தன், பரமேஸ்வரி, செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com