தம்மம்பட்டி பள்ளிக்கு அறிவியல் ரதம் வருகை

தம்மம்பட்டி நடுநிலைப் பள்ளிக்கு புதன்கிழமை வந்த அறிவியல் ரதத்தை மாணவ, மாணவியர் பார்வையிட்டனர். 

தம்மம்பட்டி நடுநிலைப் பள்ளிக்கு புதன்கிழமை வந்த அறிவியல் ரதத்தை மாணவ, மாணவியர் பார்வையிட்டனர். 
சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன்,  சென்னை பரிக்ஷன் அறக்கட்டளை, சேலம் கேலக்சி ரோட்டரி சங்கம், சேலம் ஹெச்ஜிஎல்ஐகே எக்ஸ் ஓபன் ஸ்கூல் மற்றும் கற்றல் மையம் ஆகியவை இணைந்து சேலம் மாவட்டத்திலுள்ள  நடுநிலைப் பள்ளிகளுக்கு அறிவியல் சோதனைகளை உரிய உபகரணங்களுடன் செய்துகாண்பிக்கும் வகையில் அறிவியல் ரதத்தை உருவாக்கியுள்ளன.  
இந்த அறிவியல் ரதம் முதல் ஒன்றியமாக கெங்கவல்லிக்கு வருகை தர ஏற்பாடு செய்யப்பட்டது.  அறிவியல் ரதத்தை  மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் கலைவாணன்,  தலைமையாசிரியர் அன்பழகன், ஆசிரியர் பயிற்றுநர் பச்சையம்மாள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில்  கெங்கவல்லி வட்டாரக்கல்வி அலுவலர் அந்தோணிமுத்து கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.  இதையடுத்து தம்மம்பட்டி நடுநிலைப்பள்ளிக்கு அறிவியல் ரதம் வந்தது. அதிலுள்ள அறிவியல் உபகரணங்கள் மூலம் கருத்தாளர்  நவீன்குமார்  மாணவர்களுக்கு அறிவியல் சோதனைகளை செய்து காண்பித்தார்.  மேலும், மாணவர்களின் அறிவியல் சந்தேகங்கள் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் கூறியது:   அறிவியல் ரதம் கெங்கவல்லி ஒன்றியத்தில் தொடங்கியுள்ளது. மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களுக்கு  அறிவியல் சோதனைகள் செய்துகாண்பிக்கப்படவுள்ளது என்றார் . கெங்வல்லி ஒன்றியத்தில் நாளொன்றுக்கு இரு நடுநிலைப்பள்ளிகள் வீதம் வரும் 22-ஆம் தேதி வரை ரதம் செல்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com