தம்மம்பட்டி பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு

தம்மம்பட்டி பேரூராட்சியில் குடிநீர் விநியோகிக்காததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தம்மம்பட்டி பேரூராட்சியில் குடிநீர் விநியோகிக்காததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
 தம்மம்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு பெரும்பாலும் மேட்டூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் குடிநீரையே முழுமையாக சார்ந்துள்ளனர். தம்மம்பட்டியின் பல்வேறு பகுதிகளில் 10 முதல் 15 நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
 இந்நிலையில், உள்ளூரிலுள்ள நிதி ஆதாரங்களிலிருந்து கொண்டுவரப்படும் குடிநீர், தம்மம்பட்டி சந்தை ரோடு பகுதியிலுள்ள நீரேற்று நிலையத்திலிருந்து கடை வீதியிலுள்ள பிரதான தரைநிலை குடிநீர்த் தொட்டி உள்ளிட்ட சில தொட்டிகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கும், தெருக் குழாய்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
 இந்நிலையில் தம்மம்பட்டி சந்தை சாலையில் நீரேற்று நிலையத்திலிருந்து வெளியேறும் குடிநீர்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், குடிநீர் வீணாகி கழிவுநீர் கால்வாயில் வழிந்தோடுகிறது. எனவே, குடிநீரை வீணாக்காமல் முறையாக பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com