குடிநீர் விநியோகம் செய்யக் கோரி பெண்கள் மறியல்

சேலத்தில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யக் கோரி பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். 

சேலத்தில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யக் கோரி பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். 
சேலம் மாநகராட்சி 42ஆவது கோட்டத்துக்கு உட்பட்ட நாராயண நகர் பகுதியில் அமைந்து உள்ளது குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள். இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 
இந்தநிலையில், குடியிருப்புக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. 
இதனால், குடிநீருக்காக அப்பகுதி மக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் சென்று குடிநீரை எடுத்து வர வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. 
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பல முறை சேலம் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி உள்ளனர். ஆனால், அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.இந்தநிலையில், தங்கள் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்கள், காலி குடங்களுடன் திடீரென வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 
மேலும் தங்களது குழந்தைகளுடன் மறியலில் ஈடுபட்ட பெண்கள், குடிநீர் முறையாக விநியோகம் செய்திட வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்த கிச்சிபாளையம் போலீஸார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் விநியோகம் செய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. 
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த காலங்களில் 3 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலை மாறி, தற்போது 10 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், மிக குறைந்த அளவிலேயே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com